மனிதர்களை நெருங்குதல் என்பது பெருமுயற்சியாகவே…

28.2.18 அன்று மாலை இலங்கை, வவுனியா கலாச்சார மண்டபத்தில், GOD PRESENTS நாடகக் குழுவினரால் “அந்தி மாலை பாடலொன்று” நாடகம் நிகழ்த்தப்பட்டது. இந்நாடகம் அதன் நிகழ்த்து வடிவத்திலும் அதன் செயல்முறை திட்டங்களினாலும் தற்கால தமிழ் அரங்கச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாகவே நோக்க முடிகிறது. முதலில் இந்த நாடகப்பிரதி, ஆண்டன் செக்கோவின் “Swan Song” எனும் நாடகத்தின் மொழிபெயெர்ப்பு. தனக்கென ஓர் கதை சொல்லல் முறையுடன் சிறுகதை உலகில் இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கும் செக்கோவ், 15 நாடகங்கள் வழி நாடக உலகிலும் தனி முத்திரைப் பதித்தவர், The Segull, The Cherry Orchard, A Marriage Proposal … போன்ற வரிசையில் “Swan Song - அந்தி மாலை பாடலொன்று” அதன் கருபொருள் மற்றும் நாடகக் கட்டமைப்பின் வழி எக்காலத்திற்குமானதாக இருக்கிறது. அவ்வகையில் இந்த நாடகத்தின் மொழிபெயர்ப்பினை ஈழத்து நாடக அரங்கின் தனி இயக்கமான குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் செய்திருப்பது இதன் நிகழ்த்துப்பிரதி வலுவடைந்திருப்பதின் முக்கியக்காரணி. அவருடைய “எந்தையும் தாயும்” நாடகத்தினை செ.சுந்தரேசன் இயக்க, அதில் நடித்தவன் என்ற அனுபவத்தில் அவர், கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நாடகத்தைக் கட்டமைக்கும் முறை மிக நுணுக்கமானது என்பதை நான் நன்கு அறிவேன். அவ்வகையில் இந்த நாடகப்பிரதியை அவர் மொழிபெயர்க்க வலுவான காரணமாக, ஒரு நடிகன் தனது வயதேறிய இறுதி காலத்தில், தனது மேடை அனுபவங்களை நினைவுபடுத்தி தனித்திருக்கப்பட்டவனாய் உணர்தலை முன்னெடுத்து இருக்கலாம். தனிமை, புகழ் வெளிச்சம் மங்குதல், தனது உணர்வுகளை அருகில் இருப்பவர் கவனியாமை, தலைமுறை இடைவெளி என ஒரு நடிகனின் பார்வையில் பயணிக்கிறது இந்த நாடகம். இப்பிரதியை இயக்குபவராகவும் நடிகராகவும் இருந்து தி.தர்மலிங்கம் தனது படைப்பாக்க பங்கை மிக நியாமாக வழங்கியிருக்கிறார். அதிலும் குறிப்பாக இப்பிரதி ஆரம்பம் தொடங்கி இறுதிவரை உளவியல் சார் அணுகுமுறையை வேண்டி நிற்கும் பிரதி. அவ்வகையில் தனது நடிப்பின் மூலம் மனித மனதின் பல விசாரணைகளுக்குப் பயணப்பட்டிருக்கிறார். காட்சி ரீதியில் நாடகம் முழுக்க இருளைத் துணைக்கு வைத்திருக்கிறார். அதுபோல் நாடகத்தின் மத்தியப் பகுதியில் அந்நாடக நடிகனின் உளவியல் சமன்பாடற்ற தன்மையில் மேலும் சில காட்சிப்படிமங்கள் வேண்டி நிற்பதை இயக்குனராக அவர் உணரத் தேவையும் இருக்கிறது. ஏனெனில் வசனம் மட்டுமே பேசிக்கொண்டிருத்தல் அந்நாட
கம் நிகழ்த்துப்பிரதியாவதில் முழுமைக் காணவியலாது என்பதே அது. எனினும், மொத்தத்தில் பார்வையாளர் பார்வையில் நமக்குக் கிடைக்கும் அனுபவமானது, மனித மனங்களை நெருங்குதல் என்பதில் தொடர் தோல்வியையே நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பொட்டில் அறைந்தார் போல சொல்லிச் செல்கிறது.
இப்படைப்பில் உடன் உழைத்தவர்கள் அனைவரும் நாடகப் பட்டப்படிப்பு மாணவர்கள் ஒரு தொழில்முறை நேர்த்தியுடனான உழைப்பு அவர்களிடத்தில் இருந்தது நாடகப் படைப்பிற்கு வலு சேர்த்திருந்தது. முக்கியமாக இந்நாடகத்தை வவுனியாவிற்கு கொண்டு வந்ததில் சுதந்திர அரங்கிற்கு முக்கியப் பங்கிருந்தது பாராட்ட வேண்டியது. பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாயிருந்தது என்பது அவர்களின் தொடர் மெளனமும் இறுதியில் பெருத்த கரகோஷத்தை அளித்துச் சென்றதே சாட்சி.

Comments
Post a Comment