மனிதர்களை நெருங்குதல் என்பது பெருமுயற்சியாகவே…
மனிதர்களை நெருங்குதல் என்பது பெருமுயற்சியாகவே… 28.2.18 அன்று மாலை இலங்கை, வவுனியா கலாச்சார மண்டபத்தில், GOD PRESENTS நாடகக் குழுவினரால் “அந்தி மாலை பாடலொன்று” நாடகம் நிகழ்த்தப்பட்டது. இந்நாடகம் அதன் நிகழ்த்து வடிவத்திலும் அதன் செயல்முறை திட்டங்களினாலும் தற்கால தமிழ் அரங்கச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாகவே நோக்க முடிகிறது. முதலில் இந்த நாடகப்பிரதி, ஆண்டன் செக்கோவின் “Swan Song” எனும் நாடகத்தின் மொழிபெயெர்ப்பு. தனக்கென ஓர் கதை சொல்லல் முறையுடன் சிறுகதை உலகில் இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கும் செக்கோவ், 15 நாடகங்கள் வழி நாடக உலகிலும் தனி முத்திரைப் பதித்தவர், The Segull, The Cherry Orchard, A Marriage Proposal … போன்ற வரிசையில் “Swan Song - அந்தி மாலை பாடலொன்று” அதன் கருபொருள் மற்றும் நாடகக் கட்டமைப்பின் வழி எக்காலத்திற்குமானதாக இருக்கிறது. அவ்வகையில் இந்த நாடகத்தின் மொழிபெயர்ப்பினை ஈழத்து நாடக அரங்கின் தனி இயக்கமான குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் செய்திருப்பது இதன் நிகழ்த்துப்பிரதி வலுவடைந்திருப்பதின் முக்கியக்காரணி. அவருடைய “எந்தையும் தாயும்” நாடகத்தினை செ.சுந்தரேசன்...